3 Mar 2015

புதிதாக நியமனம் பெற்ற திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்பு

SHARE
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக புதிதாக நியமிக்கப்பட்ட என்.ஏ.ஏ.புஷ்பகுமார தமது கடமைகளை இன்று (2)  சுப நேரத்தில் சர்வ மத ஆராதனைளைத் தொடர்ந்து பொறுப்பேற்றுக்கொண்டார். 

இந்நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த சிரேஷ்ட்ட அதிகாரியான இவர் நிர்வாக சேவையில் 30வருட அனுபவத்தையும் பெற்றுள்ளார்.

1985ம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட இவர் முதன்முதலாக புத்தளம் மாவட்டத்தில் கடமையாற்றினார். அரசாங்க அதிபராக நியமனம் கிடைக்க முன்னர் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்ற பின் திரு. புஷ்பகுமார உரையாற்றுகையில் திருகோணமலை மாவட்டத்தில் வருமானம் குறைந்த பின்தங்கிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இதற்கு சகல தரப்பினரது ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.

மாகாண சபை மத்திய அரசாங்கம் என வேறுபடுத்தி செயற்படாமல் கிழக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும்  இதன் மூலம் மக்களுக்கு பல சேவைகளை செய்ய முடியும். சரியான முறையில் கடமையை மேற்கொள்பவர்களை சுயாதீனமாக செயற்பட அனுமதிப்பதாகவும் தவறு செய்கின்ற சந்தர்ப்பத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திருகோணமலை மாவட்டத்தில் மூவின மக்களும் வாழ்கின்றனர். மக்களின் தேவை கருதி தமது சேவையை எவ்வித வேறுபாடின்றி நிறைவேற்றுவேன் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசாஇ மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஷ்வரன். பிரதேச செயலாளர்கள். மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள். கிழக்கு மாகாண சபையின் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
ga

New ga-1
New ga-2
SHARE

Author: verified_user

0 Comments: