3 Mar 2015

மட்டக்களப்பு மாநகர சபையினை பார்வையிட்ட வடமாகாண உள்ளூராட்சி மன்றத்தினர்

SHARE
வட மாகாணத்தில் உள்ள 35 உள்ளூராட்சி மன்றங்கள் மட்டக்களப்பு மாநகர சபையினையும் அதன் செயற்பாடுகளையும் பார்வையிடும் பொருட்டு கடந்த வெள்ளிக்கிழமை (27)  மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டனர்.

விஜயம் மேற்கொண்ட குழுவினர் மாநகர சபை அலுவலர்களின் உதவியுடன் மாநகர சபையினை பார்வையிட்டனர். இதன் போது மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பில் பலவிதமான தகவல்கள் இரு குழுக்களுக்குமிடையில் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.ஜெகு தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபையினை பார்வையிட்டனர். இதன்போது மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் அவர்களினால், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தித்திறன் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையானது கிழக்கு மாகாண சபையினால் நடாத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையிலான உற்பத்தி திறன் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டதையடுத்து தொடர்ச்சியாக வெவ்வேறு பிரதேச சபைகள் மட்டக்களப்பு மாநகர சபையினை பார்வையிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: