திருகோணமலை
மாவட்டத்தில் கடமையாற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர்களிற்கு இளைஞர்
கழகங்களை புனரமைப்பது தொடர்பான ஒரு நாள் செயலமர்வு நேற்று (02) திருகோணமலை
மாவட்ட செயலகத்தில் திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின்
உதவிப்பணிப்பாளர் ஏ.அமீர் தலைமையில் நடைபெற்றது.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின்
கீழ் இளைஞர் கழகங்களை புனரமைத்து அவற்றிற்கு தேவையான நடவடிக்கைகளை எவ்வாறு
ஆக்கபூர்வமாக மேற்கொள்வது தொடர்பாக இதன் போது இளைஞர் சேவை
உத்தியோகத்தர்களிற்கு தெளிவுபடுத்தப்பட்டது.
0 Comments:
Post a Comment