20 Mar 2015

கிரான் பிரதேச பெண்களுக்கு தொழிற்பயிற்சி

SHARE
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில், சுயதொழில் முயற்சியில் ஈடுபடும் கிரான் பிரதேச யுவதிகளுக்கான 3 நாள் வதிவிட அழகுக்கலைப் பயிற்சி இன்று (20) ஆரம்பமானது.
 
கோரளைப்பற்று  தற்கு (கிரான்) பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த யுவதிகள் பங்குபெறும் இந்த மூன்று நாள் வதிவிட செயலமர்வு, சத்துருக்கொண்டானிலுள்ள சர்வோதயத்தில் நடைபெறுகிறது.
 
 
மட்டக்களப்பு மவாட்டத்தில் கிரான் பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளை வளப்படுத்தி, வாழ்வாதாரம் மற்றும், தலைமைத்துவ மேம்பாடு என்பவற்றை நோக்காக கொண்டு இப்பயிற்சி நடத்தப்படுகிறது.
 
நவீன நவநாகரீக, போட்டித்தன்மைமைக்கேற்ற நடத்தப்படவுள்ள இப்பயிற்சி நெறியை தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் கிரான் பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
 
இவ்வாறான பயிற்சிகள் மூலம் யுவதிகளின் வருமானம்  வாழ்வாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கிரான் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகஸ்தர் த.விந்தியன் தெரிவித்தார்.
 
இதன் ஆரம்ப நிகழ்வில், கிரான் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் த.விந்தியன் தலைமையில் ஆரம்பமான இப்பயிற்சி ஆரம்ப நிகழ்வில் - இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டார். அத்துடன், மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் திருமதி நிசாந்தினி அருள்மொழி,  வேள்ட் விஷன் நிறுவன கிரான் திட்ட முகாமையாளர் செல்வி தர்மகுலராஜா கவிதா, கிரான் பிரதேச திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.ரஜனிகாந்த் உட்டோரும் வளவாளர்களும் கலந்துகொண்டனர்.
 
Beauti-1
SHARE

Author: verified_user

0 Comments: