சிறுபோக நெல் விதைப்புக்காக பண்படுத்தி வைக்கப் பட்டிருந்த வயல் நிலங்கள்
களுமுந்தன்வெளி வாய்க்காலினூடாக வந்த நீர் உடைப்பெடுத்ததன் காரணமாக வயல்
நிலங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது….
மட்டக்களப்பு மாவட்டம் நவகிரி நீர்ப்பாசனத்திற்குட்பட்ட நீலண்டமடு, சுணையங்குடா வயற்கண்டம் சிறுபோக வேளாண்மைச் செய்கைகளுக்காக தற்போது பண்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இவ்வயற் கண்டத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பு நெல் விதைப்பதற்கு தயாரான நிலையிலிருந்தபோது அருகிலுள்ள வாய்க்காலினூடாக கற்சேனை வயற் கண்டத்திற்குச் சென்று கொண்டிருந்த நீர் வாய்க்காலை உடைப்பெடுத்து பண்படுத்தப்பட்டிருந்த வயல் நிலத்தைச் சேதமடையச் செய்துள்ளது.
இதனால் களுமுந்தன்வெளி எனும் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிகளில் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
தமது வயல் நிலத்தினூடாக வாய்க்கால் நீர் உடைப்பெடுத்து பரவிச் சென்றுள்ளதனால் வயலிலுள்ள அனைத்து வரம்புகளும் உடைபட்டுள்ளதுடன் பலத்த சேமமும் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் 25 ஏக்கர் வயர் நிலம் முற்றாகப் பாதிப்படைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த சனிக்கிழமை(14) இரவு 9 மணியளவில் நவகிரிக்குளத்திலிருந்து 9 இஞ்சி உயரத்தில் 2 வான் கதவுகள் திறந்துவிடப் பட்டுள்ளன, பின்னர் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (15) பகல் சனிக்கிழமை திறந்துவிடப்பட்ட அந்த வான்கதவுகள் இரண்டும் 1 அடிவரை உயர்த்தப்பட்டுள்ளன.
வளக்கம்போல் இப்பிரதேசத்திலுள்ள 34 தொடக்கம் 54 வரையிலான வாய்க்கால்கள் ஊடாக நவகிரிக் குளத்திலிருந்து திறந்து விடப்படும் நீர் வயல்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றது. அதுபோல் இந்த களுமுந்தன்வெளி வாய்கக்காலுடாக சென்று கொண்டிருந்த நீர் அவ்வாய்க்காலிலுள்ள ஒரு சிறிய பாலத்தில் அடைப்பு ஏற்பட்டதனால் நீர் செல்ல வழியின்று உடைப்பெடுத்துள்ளதாக நவகிரிப்பிரிவு நீர்ப்பாசன காரியாலயத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவம் திங்கட் கிழமை (16) திகதி இடம் பெற்றுள்ளது.
இருந்தபோதிலும் வாய்க்காலையும் குறித்த வீதியையும், புதன் கிழமை (18) நவகிரிப்பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயம் புணரமைத்து வருகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் அப்பகுதி விசாயிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர் புதன்கிழை (18) அப்பகுதிக்குச் சென்று நிலமையினை ஆராய்ந்தார்.
நீர் உடைப்பெடுத்ததினால் இப்பகுதி விவிசாயிகள் தற்போது பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளார்கள் விவசாயச் செய்கையிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இவ்விடையம் குறித்து தான் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும், இந்த இடத்திற்கு தமது அதிகாரிகளை உடன் அனுப்பி நிலமையினை ஆராய்வதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர், பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment