9 Mar 2015

கல்முனை யங் பேட்ஸ் கழகத்தின் புதிய சீருடை அறிமுக விழா

SHARE
கல்முனை யங் பேட்ஸ் விளையாட்டுக்கழகத்தின் புதிய சீருடை அறிமுக விழாவினையொட்டி நடைபெற்ற சினேகபூர்வ கடினபந்து ரீ-20 கிரிக்கெட் போட்டியில் யங் பேட்ஸ் விளையாட்டுக்கழகம் 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
கல்முனை யங் பேட்ஸ் விளையாட்டுக்கழக வீரர்களுக்கான புதிய சீருடை அறிமுகத்தினையொட்டி கல்முனை றினோன் விளையாட்டுக் கழகத்திற்கும், யங் பேட்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் நடைபெற்ற இப்போட்டி கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கல்முனை றினோன் விளையாட்டுக் கழகத்தினர் முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 133 ஓட்டங்களை பெற்றனர். 
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை யங் பேட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் விக்கெட்டுக்கள் இழக்கப்பட்ட நிலையிலும் இறுதிவரை மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வெற்றி இலக்கை அடைந்தனர்.
இப்போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக ஓய்வு பெற்ற அட்டாளைச்சேனை கல்விக் கல்லுாரி விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா, விசேட அதிதிகளாக ஜிம்கானா

விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எஸ்.எல்.எம். லாபீர், றினோன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் தொழிலதிபர் ஏ.எம். பைறுாஸ் ஆகியோருடன் கல்முனை யங் பேட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.ஜாசிக் ஆசிரியர், பிரதித்தலைவர் எம்.எம். மர்சூக், செயலாளர் எம்.வை. பாயிஸ், உயர்பீட உறுப்பினர்களான ஏ.வி. அர்ஸாத், எஸ்.நியாஸ், ரி.ஆர். அஜ்மீர் ஏ.எச்.எம். அஷ்ரப் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
வெற்றிபெற்ற அணி, ஆட்டநாயகன் ஆகியோருக்கான வெற்றிக் கேடயம், பரிசில்களை பிரதம அதிதி ஆரிப் சம்சுதீன் வழங்கிவைத்ததுடன், கல்முனை யங் பேட்ஸ் விளையாட்டுக்கழகத்தின் செயலாளராக இருந்து மிக நீண்டகாலம் பணியாற்றிவரும் எம்.வை. பாயிஸ் மற்றும் கௌரவ அதிதி மிக நீண்டகாலம் பிரதேச விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வரும் எம்.ஐ.எம். முஸ்தபா ஓய்வு பெற்ற விரிவுரையாளரையும் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

SHARE

Author: verified_user

0 Comments: