18 Mar 2015

தம்மால் முன்வைக்கப்பட்ட கேரிக்கைக்கு ஜனாதிபதியிடமிருந்து பதில் கிடைத்துள்ளது - ஞா.கிருஸ்ணபிள்ளை

SHARE
ஜனாதிபதியிடம் தம்மால் முன்வைக்கப்பட்ட கேரிக்கைக்கு அமைவாக, அவற்றை நடமுறைப்படுத்துவதற்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான பதில் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளரிடம் இருந்து தமிழ் மொழி மூலம் தனக்கு சனிக்கிழமை (14) கிடைத்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.

கடந்த 03.03.2015 அன்று திருகோணமலையில் நடைபெற்ற கிழக்கு மாகாண ஒருங்கிணைக்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினவிடம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை

மூன்று கோரிக்கைகளை அடங்கிய கடிதம் ஒன்றினை நேரடியாக ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார். இதற்கமைவாகவே ஜனாதிபதியின் செயலாளரினால் நடவடிக்கை முன்னெடுக்கப்  பட்டுள்ளது.

மாகாண சபை உறுப்பினரால் வழங்கப்பட்ட கடிதத்தில் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் சனத்தொகைகளை கருத்தில் கொண்டு பிரதேச செயலகம், பிரதேச சபைகளை அமைத்தல், தும்பாலைக் குளத்தை மறித்து தும்பங்கேணி குளத்திற்கு நீரினை கொண்டு செல்லல், வீதி மின் விளக்குகளை பெருத்ததல் போன்ற கேரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதற்கு அவைவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர், மகாவலி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், போன்றோருக்கு நடவடிக்கைக்காக ஜனாதிபதியின் செயலாளர் எஸ்.டீ.கொடிகாரவினால், உத்தரவு பிறப்பிக்கப்ட்ட கடிதங்கள் அனுப்பிகை;கப் பட்டுள்ளது.

அக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளையின் கோரிக்கையை ஏற்று அவற்றை நடைமுறைப் படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அது சம்மந்தமாக தாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உடன்  மகாண சபை உறுப்பினருக்கு அறியப்படுத்துமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இதன் பிரதிகள் சிங்களத்திலும், தமிழிலும், தனித்தனியாக கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தமிழில் ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து கிடைக்கபெற்ற கடிதத்தினை கண்டு தான் மகிழ்சிசியடைந்ததாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை மேலும் தெரிவித்தார் 
SHARE

Author: verified_user

0 Comments: