18 Mar 2015

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு 50 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு

SHARE
ஊடகவியலாளர்களுக்கு 50 இலட்சம் பெறுமதியான ஊடக உபகரணங்கள் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு நேற்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் ஆயர் இராயப்பு ஜேசேப் கலந்து கொண்டார். 

தினகரன், வீரகேசரி, தினக்குரல் பத்திரிகை நிருபர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள் 25 பேருக்கு லெப் டொப், 10 புகைப்படக் கருவிகள், பெக்ஸ் மெசின்கள், வொயிஸ் ரேக்கோடர்கள் என்பன இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டன. 

இதில் வீரகேசரி பத்திரிகையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பர், புகைப்பிடிப்பாளர் சலீம், வீரகேசரி ஊடகவியலாளர் மின்காஜ் ஆகியோருக்கு மடிக்கணனி வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், யோகேஸ்வரன், பேராசிரியர் ஜெயராஜ், மனோ கணேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்துடன், சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் சின்னத்துரை சண்முகராஜ், பாலசிங்கம், இளையதம்பி பாக்கியராசா, கந்தசாமி அரசரட்னம், கருப்பையாப்பிள்ளை லோரண்ஸ் குஞ்சா ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.



































SHARE

Author: verified_user

0 Comments: