18 Mar 2015

இந்தியாவை தள்ளிவைத்து இலங்கை ஒன்றும் செய்ய முடியாது- ஆனந்தசங்கரி

SHARE
இந்தியாவை தள்ளிவைத்து இலங்கை ஒன்றும் செய்ய முடியாது இந்தியா நினைத்தால் இலங்கை அரசாங்கத்தை அடிபணிய வைக்க முடியும் எமக்கு இந்தியாதான் எல்லாமே! என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கிரி தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் கூட்டம் மேற்படி கட்சியின், மாவட்டக் கிளையின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தலைமையில் சனிக்கிழமை (14) மட்டக்களப்பு கூட்டுறவுச் சங்கக் கட்டடத்தில் இடம் பெற்றது அக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்…

எனக்கு சூட்டப்பட்ட பட்டங்கள் திட்டமிட்டு ஒரு கூட்டத்தினரால் உருவாக்கப்பட்டது. நான் ஒரு போதும் தமிழ் மக்களுக்கு விரோதமாகா செயற்பட்டவன் அல்ல. அதே போன்று புலிகளுக்கு எதிராக செயற்பட்டவனும் அல்ல. நான் சில உண்மைகளையும், புத்திமதிகளையுமே எடுத்துக் கூறினேனே தவிர புலிகளின் போராட்டத்தினை ஒரு போதும் கொச்சைப் படுத்தவில்லை.

நான் விடுதலை புலிகளை ஏகபிரதிநிதிகளாக  ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் என்மீது சுமத்தப்பட்ட கூற்றச்சாட்டு. இது தவறானது நான் சில குறிப்பிட்ட விடயங்களுக்கு விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்வேன். அதாவது இனப்பிரச்சினை சம்மந்தமாக அரசாங்கத்துடன் பேசுவதற்கு அதனை முன்னெடுத்தல் போன்ற சில விடயங்களுக்கு அவர்கள் தான் ஏகபிரதிநிதி என்பதனை நான் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தேன். மாறாக புலிகள் என்னை இருங்கள், எழும்புங்கள், எனன்று கூறும் அளவிற்கு அவர்களை நான் ஏற்றுக் கொள்ள முடியாது  என்பதையே! அன்று நான் தெளிவாக கூறியிருந்தேன.; இதற்கான ஆதாரங்கள் எனது கையில் உண்டு இதுதான் நான் செய்த குற்றம் இதனை எவரும் குற்றமென கருதமுடியுமா?

மேலும் பல பேச்சு வார்த்தைகளுக்கு சென்று வந்தார்கள் என்னை அழைக்கவில்லை. காரணம் நான் ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க்கூடாது என்று நான் அன்று கூறியியிருந்தேன். இதனையும் அன்று பிழையாக சித்திரித்திருந்தார்கள் இதனை நான் ஏன் கூறினேன். ஏதற்கா கூறினேன் என்று எவரும் சிந்திக்க வில்லை.

நான் என்ன சும்மாவா கூறியிருந்தேன் நான் என்ன சும்மா கூற முட்டாளா? அல்லது படிக்காமல் புலுப் புடுங்கியவனா? 60 வருடம் அனுபவத்தின் மூலம் அரசியல் படித்தவன் அரசியலை புத்தகத்திலும் படித்தவன். இலங்கைக்கு மிக அண்மையில் முப்பது கட்டைத் தூரத்தில் உள்ள நாடு எடுத்தவுடன் எமக்கு பக்கத்தில் உதவி செய்யக் கூடிய நாடு இந்தியா. உதாரணமாக சுனாமி அடித்து நான்கு மணிநேரத்திற்குள் இங்கு வந்திறங்கியது வைத்திய குழு எங்களுக்கு வைத்திய  உதவி செய்வதற்காக.  இவ்வாறாக ஆபத்துக்கு உதவுபவருடன் பகைக்க முடியாது காந்தியே கூறியிருக்கின்றார் இந்தியா இலங்கையை தள்ளி வைக்க முடியாது எனக் கூறியிருக்கின்றார்.

எனவே எமக்கு  எல்லாமே இந்தியாதான் இந்தியாவை தள்ளி வைத்து ஒன்றும் செய்ய முடியாது. இந்தியா நினைத்தால் இலங்கை அரசாங்கத்தினை அடிபணியவைக்;க முடியும். ராயுகாந்தி என்ன செய்தார் இதனை அறியாமல் செயற்பட முடியாது நாங்கள் நிதனமாக அரசியல் செய்ய வேண்டும். இதனையே எடுத்துக் கூறிவருகின்றேன். இதற்காகவே ஜனாதிபதிக்கு இந்தியாவை சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம் என கடிதம் எழுதியிருந்தேன்.
இரண்டு தரங்கள் தமிழ் நாட்டின் வாக்குகளுக்கு பயந்து இந்தியா  ஜெனிவாக்கு சென்றது மூன்றாம் தடைவை இந்தியா செல்லவில்லை இதற்காக  தமிழரின் முதுகில் இந்தியா குத்தியது எனக் கூறியிருந்தார்கள் நான் கூறுவதுசரியா? அவைகள் கூறுவதுசரியா? இன்று நடப்பது என்ன சிந்தித்துப் பாருங்கள்.

1945 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த ஆண்டு ஜி.ஜி.பொன்னம்பலம், செல்வநாயகம் அகிய இருவரும் ஒரே கட்சி தமிழ் காங்கரஸ் கட்சி. இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கும் போது பிருத்தானிய அரசு கேட்கின்றது உங்களுக்கு பாராளுமன்ற முறையைத்தரப் போகின்றோம் இதற்காக நீங்கள் தயாராக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். இவ்வாறு தமிழரின் பிரச்சினையை தீர்ப்பதற்கு உருவாக்கப்பட்துதான் தமிழ் காங்கரஸ் கட்சி. சுதந்திரம் கிடைத்து அடுத்த வருடம் இக் கட்சி உடைந்துவிட்டது. காரணம் இந்தியா மக்களின்  இந்தியா பிரஜாவுரிமைச்சட்டம் இதனை ஜி.ஜி. பொன்னம்பலம், ஆதரித்தார் செல்லநாயகம் எதிர்த்தார் இதனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிளவு காரணமாகவே தமிழரசுக் கட்சியினை தந்தை செல்வா அவர்கள் உருவாக்கினார். இதன் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டு இருந்தது இதன் பரிகாரம் ஜி.ஜி.பொன்னம்பலம்  தோல்வியடைந்தார்.

பின்னர் 1972 ஆண்டு அரசியல் சட்டத்தினை மாற்றியமைக்க அப்போதைய அரசு முற்பட்ட வேளை முடிசூடா மன்னனாக இருந்த ஜி;.ஜி.பொன்னம்பலத்தை படுதோல்வி அடையச் செய்து வீட்டுக்கு அனுப்பிய தந்தை செல்லவா அனைவரும் ஒற்றுபட வேண்டும் என்ற எண்ணத்துடன்  ஜி.ஜி. பொன்னம்பலம், வீட்டுக், வீடு தேடி சென்றவேளை செல்வநாயகம் அவர்களை இன்முகத்துடன் வரவேற்று அவருக்கு ஜி.ஜி.பொன்னம்பலம்  ஆதரவு வழங்கி இருந்தார். இதன் பிரகாரம் அனைவரும் ஒன்றிணைந்து திருகோணமலையில் கூட்டம் ஒன்றும் நடாத்தப்பட்டது. அன்று ஒன்றுபட்டதன் விளைவாகவே அனைவரின் ஒன்றிணைந்த தீர்மானத்திற்கு அமைவாக  தமிழர் விடுதலை கூட்டணி உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் இறக்கும்வரை தமிழரசுக் கட்சி என்ற பெயரை தலைவர் செல்வா அவர்கள் உச்சரிக்கவி;ல்லை என்பதுதான் உண்மை.

எவ்வாறு பலத்த எதிராளியாக இருந்த நாங்கள் ஒரே நாளில் ஒன்றுபட வில்லையா இவ்வாறு ஒன்றுபட்டே நாங்கள் இந்த நாட்டில் பல சவால்களுக்கு முகம் கொடுத்து செயற்பட்டோம் என்பதனை நீங்கள் அறியவேண்டும் இந்த உண்மைகள் இன்று மறைக்கப் படுகின்றது இந்த வரலாறுகளை  தமிழ் மக்களாகிய நீங்கள் தெரிந்து கொண்டு செயற்படவேண்டும் எனத் தெரிவத்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: