23 Feb 2015

சட்டவிரோத மின்சாரம் பெற்ற இரு பெண்கள் உட்பட அறுவர் கைது

SHARE
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று பொலிசாரின் உதவியுடன் அம்பாறை மின்சார சபையின் விசேட புலனாய்வுக் குழுவினர் நேற்று சனிக்கிழமை இரவு மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே இவர்கள் சிக்கியுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஆலையடிவேம்பு, பனங்காடு, ஆலங்குளம் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள், இவர்களுள் மூன்று பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆறு பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெறுகின்றவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: