17 Feb 2015

திருமலையில் பயிற்சி நெறியை முடித்தவர்களுக்கு சான்றிதழ்

SHARE
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் கணக்காளர் மற்றும் நிதி உதவியாளர் ஆகியோரிற்கான கணனி மயப்படுத்தப்பட்ட அரச கணக்கீட்டு முறைமை தொடர்பான செயலமர்வு அண்மையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
பயிற்சி நெறியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கான சான்றிதழ்களும் இந்நிகழ்வில் கடந்த 13 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. 

சான்றிதழ்களை திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். அருள்ராசா, மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் கலைஞானசுந்தரம் ஆகியோர் வழங்கி வைத்தார்கள்.

குறித்த செயலமர்வை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் கலைஞானசுந்தரம் அவர்கள் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
trinco certify



SHARE

Author: verified_user

0 Comments: