17 Feb 2015

சிவனுக்கான மகா சிவராத்திரி விரதம் இன்று

SHARE
இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானுக்கு அன்பினை செலுத்தும் விதமாக இன்றைய நாள் முழுதும் அவனை எண்ணி வழிபடும் மகா சிவராத்திரி விரதம் இன்று (17) உலகின் அனைத்து பிரதேசங்களிலும் வாழும் இந்து மக்களால் உணர்வுப+ர்வமாக அனுட்டிக்கப்படுகிறது.
இந்துக்களின் அனைத்து விரதங்களிலும் ராத்திரி என்ற பெயருடன் வரும் விரதங்களில் சக்திக்கான நவராத்திரி விரதமும் சிவனுக்கான சிவராத்திரி விரதம் விளங்கி வந்தாலும் அனைவராலும் மகோன்னதமாக கருதப்படுவது இச் சிவராத்திரி விரதமேயாகும் . ஏனெனில் நாள் முழுவதும் சிவனை எண்ணி விரதமிருந்து இரவு முழுவதும் நித்திரை கொள்ளாது சிவனை பாராயணம் செய்து கடைப்பிடிக்கும் இவ்விரதம் அனைத்து விரதங்களையும் விட புனிதமாக கருதப்படுகிறது.

சிவராத்திரி விரதம் நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, என்றெல்லாம் வகைப்படுத்தப்படுகின்றன. ஆயினும் மாசி மாதத்தில் கிருஸ்ண பட்சத்தில் வரும் புண்ணிய தினமே இச்சிவராத்திரி தினமாக அனைத்து இந்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது.

சிவராத்திரி பற்றி பல புராணக்கதைகள் பல விதமாக சிவனது மகிமையை எடுத்துக் கூறுகிறது. இன்றைய தினத்தில் நான்கு ஜாமங்களும் தனித்தனியான ப+ஜை முறைகள் நடத்தப்படுவதாக சிவபுராணம் கூறுகிறது.

அதில் ஒரு கதையாக சிவன் மீது அதிக பக்தியும் சிரத்தையும் கொண்ட வேடுவன் ஒருவன் ஒரு முறை காட்டு வழியாக வரும் போது அவனை கொடிய காட்டு விலங்குகள் துரத்துகின்றன. அவ்விலங்குகள் தங்கள் பசியை போக்க அவனை உட்கொள்ளும் வேகத்தில் துரத்துகின்றன. அவற்றின் கைகளில் அகப்பட்டால் அவனது உயிர் போய்விடும் என்ற பயத்துடன் வேகமாக ஓடுகிறான். கடைசியில் ஒரு மரத்தினை கண்டு அதில் ஏறிக்கொள்கிறான். அப்போது அந்த காட்டு விலங்கு அவன் இறங்கும் வரை அவனை எதிர்பார்த்து கீழே காத்திருக்கின்றது. அவனோ மரத்தின் மீது ஏறி இருக்கிறான். அப்போது நேரமும் வேகமாக சுழன்று இரவாகி விட்டது. அவனுக்கு நித்திரை கலக்கம் வேறு. நித்திரை கலக்கத்தில் இருந்து மரத்தில் இருந்து விழுந்தால் அவனை அந்த விலங்கு உண்டுவிடும். அதனால் அவன் நித்திரை கொள்ளாமல் விழித்திருப்பதற்காக அம் மரத்திலிருந்து ஒவ்வொரு இலைகளாக பிடுங்கி கீழே போட்டுக்கொண்டிருந்ததாகவும் விடியும் வரை அவன் அவ்வாறு செய்து கொண்டிருந்தான்.

விடிந்ததும் கீழே பார்த்த போது காட்டுவிலங்கு காணாமற் போய் அவ்விடத்தில் அந்த இலைகளுக்கு மத்தியில் சிவலிங்கம் இருந்ததாகவும் ஓர் புராண கதை உண்டு. அவன் ஏறியமர்ந்த மரம் வில்வ மரம். அதனாலேயே சிவராத்திரி விரதத தினத்திலன்று வில்வமரத்து இலைகளை வழங்கி சிவனை இரவு முழுவதும் பாராயணம் செய்து வழிபட்டால் அவனது அருள் கிடைத்து பக்தர்களின் வாழ்வில் ஒளிமயம் பிறக்கும் என்பது திண்ணம்.

இது மட்டுமன்றி பல விதமான புராணக்கதைகள் சிவனது மகிமையை எடுத்துரைப்பதன் மூலம் சிவராத்திரி விரதத்தின் புனிதத்தினையும் அடியார்களுக்கு எடுத்துரைக்கின்றது.
SHARE

Author: verified_user

0 Comments: