23 Feb 2015

வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள சிரேஸ்ட்ட தாதி உத்தியோகஸ்தர்கள் விசேட தாதிய தரத்திற்கு உள்வாங்கப் படவில்லை.

SHARE
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் சிரேஸ்ட்ட தாதி உத்தியோகஸ்தர்களாக கடமையாற்றி வரும் நாம் இதுவரையில் தாதியர் சேவை விசேட தரத்துக்கு உள்வாங்கப்படாது, திட்டமிட்டு புறக்கணிக்கப் பட்டுள்ளளோம், என பாதிக்கப் பட்டுள்ள சிரேஸ்ட்ட தாதி உத்தியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடையம் தொடர்பில் பாதிக்கப் பட்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும், சிரேஸ்ட்ட தாதி உத்தியோகஸ்தர்கள் சார்பாக

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியுரியும், சிரேஸ்ட தாதிய உத்தியோகஸ்தர் க.சிவப்பிரகாசம்  ஞாயிற்றுக் கிழமை (22) அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…..

 எமது பதவி உயர்வு குறித்து கடந்த அரசாங்கத்திலிருந்த அமைச்சர்களுக்கும், பிரதியமைச்சர்களுக்கும், ஏனைய அரசியல் வாதிகளுக்கும், தெரிவித்தும் எதுவித பலனும் கிடைக்கப் பெறவில்லை

தாதியர் சேவை விசேட தர நியமனத்துக்காக பல்கலைக் கழகத்தில் சுகாதார அமைச்சில் பயிற்சியளிக்கப்பட்ட வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தாதியர்களை உள்ளடக்காது, சிங்கள மொழி மூலம் கொழும்பில் பயிற்சியளிக்கப்பட்ட தாதியர்களுக்கு மாத்திரம், கடந்த 09.02.2015 அன்று பதவியுர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் வடக்கு கிழக்கிலே இருந்து சிரேஸ்ட்ட தாதி உத்தியோகஸ்தர்களாக கடமையாற்றி வரும் 15 போர் அந்த தாதியர் சேவை விசேட தரத்திற்கு உயர்த்தப்படவில்லை,

வடக்கு கிழக்கிலே கடமைபுரிந்து வரும் சிரேஸ்ட்ட தாதி உத்தியோகஸ்தர்களையும், விசேட தரத்திற்கு பதவி உயர்த்துமாறு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி  பொதுச்சேவை ஆணைக்கு சுகாதார அமைச்சிக்கு, அனுமதி வழங்கியிருந்தது. ஆனாலும் நாம் இந்த விடையத்தில் புறக்கணிக்கப் பட்டுள்ளோம்.

எனவே வடகிழக்கில் காணப்படும் வெற்றிடங்களைக் கருத்தில் கொண்டு பயிற்சியளிக்கப்பட்ட தமிழ் தாதியர்களை உரிய தாதியர் சேவை விசேட தரத்திற்கு சேர்த்துக் கொள்ள சுகாதார அமைச்சு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் அந்த அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: