மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மிகவிரைவில் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரம சிங்க வருகைதரவுள்ளதாக சிலர் வந்திகளைப் பரப்பி வருகின்றார்கள். இந்த தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும், எனவே இவ்வாறான வந்திகளை மக்கள் நம்பவேண்டாம், என கேட்டுக் கொள்கின்றேன் என ஐக்கிய தேசிக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அரசரெத்தினம் சசிதரன் தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்……
மிகவிரைவில் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரம சிங்க மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதரவுள்ளதாக மாவட்டத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதாக அறிகிறேன்,
எமது கட்சியினதும், கட்சி சார்ந்த அரசியல் தலைவர்களினதும், உத்தியோக பூர்வ நடவடிக்கைகள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்வதென்றால் அது எமது கட்சியின் மாவட்ட அமைப்பாளரினூடாகவே முன்னெடுக்கப்படும்.இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்……
மிகவிரைவில் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரம சிங்க மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதரவுள்ளதாக மாவட்டத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதாக அறிகிறேன்,
தற்போதைய நிலையில் எமது கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரம சிங்க மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய விஜயம் குறித்து எதுவித முடிவும் எடுக்கப் படவில்லை.
எனவே மட்டக்களப்பிற்கு ரணில் விக்கிரமசிங்க மிகவிரைவில் வரவுள்ளார் என்ற தகவல் முற்றிலும் வாந்தியாகும். இதனை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment