25 Feb 2015

ஜனாதிபதி மார்ச் 3 இல் திருகோணமலை விஜயம்

SHARE
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி திருகோணமலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அன்றைய தினம் ஜனாதிபதி மாலை 2 மணிக்கு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள விசேட கூட்டம் ஒன்றிலும் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.

இவ்விசேட கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தை பிரதிநதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் , உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் உட்பட அரசியல் பிரமுகர்களும் கிழக்கு மாகாணத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் அரசாங்க அதிபர்கள்  திணைக்களத்தலைவர்கள்  மற்றும் பிரதேச செயலாளர்களும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.(nl)
SHARE

Author: verified_user

0 Comments: