25 Feb 2015

மட்டு நகரில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு

SHARE
மட்டக்களப்பில் நெல் சந்தைப்படுத்தல் சபையானது பெரும் போக அறுவடையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடமிருந்து இம் மாதம் 26 ஆம் திகதி முதல் நெல் கொள்வனவில் ஈடுபடவுள்ளதாக கிழக்கு பிராந்திய முகாமையாளர் டப்ளியூ.எம்.என்.ஆர்.வீரசேகர தெரிவித்தார்.

இவ் நெல் கொள்வனவுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கரடியனாறு, வவுணதீவு, தும்பங்கேணி, புலிபாய்ந்தகல், கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை ஆகிய இடங்களிலுள்ள நெல் களஞ்சியசாலைகளில் நடைபெறும்.

உரிய தர நிர்ணய அடிப்படையில் வழங்கப்படும் சம்பா, கீரி சம்பா கிலோ ஒன்று 50 ரூபாவுக்கும், நாடு 45 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளன. ஒரு விவசாயக்காணி உத்தரவுப்பத்திரத்திற்கு 2000 கிலோ என்ற அடிப்படையில் இக் கொள்வனவுகள் நடைபெறவுள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தும் சபை அறிவித்துள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: