25 Feb 2015

மட்டில் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் மூன்று தினங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின் அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.

இதன்படி 26.02.2015 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மாவடிவேம்பு, வந்தாறுமூலை, கொம்மாதுறை, செங்கலடி, கொடுவாமடு, இலுப்படிச்சேனை, கரடியனாறு, கோப்பாவெளி, பெரியபுல்லுமலை, உன்னிச்சை, ஆயித்தியமலை, நரிப்புல் தோட்டம் மற்றும் ஏறாவூர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பகுதி முழுவதும் மின் வெட்டு அமுலில் இருக்கும்.

27.02.2015 காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மஞ்சந்தொடுவாய், நாவற்குடா, பூநொச்சிமுனை மற்றும் கல்லடி ஆகிய பகுதிகளிலும் 28.02.2015 காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை புன்னக்குடா வீதி, மிச்நகர், மீராங்கேணி, சதாம் குசைன் கிராமம், ஐயங்கேணி, தைக்கா வீதி, மக்களடி வீதி மற்றும் தாமரைக்கேணி ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: