15 Jan 2015

அனைவருக்கும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்

SHARE
தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை தைத்திங்கள் முதல் நாளான இன்று (15) அனைத்து இந்து மத மக்களாலும் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் தமிழர்களுக்கே மிகவும் சிறப்பான  ஒரு நாள். இந்த நாளன்று உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் சாதி, மதம் என்ற எந்த ஒரு வேறுபாடில்லாமல் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.

இவ்வாறு கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையின்  வரலாற்றினை சற்று நோக்குமிடத்து, சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும்  பெண்கள் இந்நோன்பைக் கடைப்பிடித்தார்கள்.

தை முதல் நாளில் இந்த நோன்பை முடிப்பார்கள். நல்ல விளைச்சல்  கொடுத்தமைக்காக பூமி, பகலவன், உதவிய கால்நடை,  போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல்  படைத்து வழிபட்டனர்.

இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது. பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும்  மறுக்க முடியாத உண்மையாக இருந்து வருகிறது.

இன்றைய தினம் தைப்பொங்கலாகவும் நாளை (16) பட்டிப் பொங்கலாகவும் நாளை மறுதினமான 17 ஆம் திகதி காணும் பொங்கலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: