23 Jan 2015

குற்றச்சாட்டுக்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பியுங்கள்

SHARE
தன் மீது சுமத்தியுள்ள இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளையும் முடிந்தால் மூன்று தினங்களுக்குள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியிடம் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில்,

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், கடந்த 25 வருடகால பாராளுமன்ற வாழ்க்கையில் மிகவும் கஸ்டப்பட்டு தேடிப்பிடித்து என்மீது மூன்று ஊழல் குற்றசாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

அதற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அடுத்த இரண்டு குற்றச்சாட்டுக்களையும் அடுத்த மூன்று தினங்களுக்குள் சகல ஆதாரங்களுடனும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு வேண்கோள் விடுக்கின்றேன்.

அங்கு நான் விளக்கமளிக்கவும் உங்கள் வேண்டுகோளின் படி ஒத்துழைக்கவும் தயாராகவுள்ளேன்.

அவ்வாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் மூன்று தினங்களுக்குள் குற்றச்சாட்டுக்களை சமர்ப்பிக்கத் தவறினால் என்மீது அபாண்ட பழி சுமத்தியவர்கள் என்றும் பொய்யர்கள் என்றும் மக்கள் மத்தியில் எடுத்துக்கூறுவேன்.

மேலும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த ஆதாரங்களை பகிரங்க படுத்தவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
SHARE

Author: verified_user

0 Comments: