தேசத்தின் முதற்தர உணவு மற்றும் இனிப்பு உற்பத்தி செய்யும் நிறுவனமான
சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட்(சிபிஎல்) நிறுவனத்தின் முன்னணி வர்த்தகநாமமான
மஞ்சி, இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக மீண்டும் அதன் தலைமைத்துவத்தை
உறுதி செய்துள்ளது.
Mclloyd வர்த்தகப் புலனாய்வு அமைப்புக்கமைய, நாட்டின் 70% க்கும் மேற்பட்ட ஏற்றுமதியில் மஞ்சி பங்களிப்பு வழங்குகிறது. இந்த நிறுவனம் உலகளாவிய ரீதியில் ஏழு கண்டங்கள் மற்றும் 55 க்கும் அதிகமான சந்தைகளில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
அனுகா, சியல், Gulfood மற்றும் ஏனைய மிகப்பெரிய வர்த்தகக் கண்காட்சிகள் அனைத்திலும் மஞ்சி வழமையாக பங்குபற்றி வருகிறது. அவற்றுள் அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற ஆசியாவின் மிகப்பெரிய வருடாந்த உணவு மற்றும் குடிபானங்கள் வர்த்தக கண்காட்சியான Foodex மற்றும் மாலைதீவில் இடம்பெற்ற Hotel Asia கண்காட்சிகளில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
CBL நிறுவனத்தின் ஏற்றுமதி முகாமையாளர் ஜே.எஃப்.ருபேரா இந்த விசேட மைல்கல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “எமது உற்பத்திகளுடன் சர்வதேச சந்தையில் ஊடுருவதை நாம் முன்னெடுத்து வருகிறோம். நாம் பிஸ்கட்ஸ் உற்பத்தியில் மாத்திரமன்றி, சேதன உணவு வகைகள் உள்ளடங்கலாக சொக்லட்டுகள், கேக்குகள், சோயா மற்றும் சீரியல்கள் போன்றவற்றிலும் தரம் வாய்ந்த உற்பத்திகளை கொண்டுள்ளோம்” என தெரிவித்தார்.
அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஏற்றுமதியை சமாளிக்கும் வகையில், CBL நிறுவனம் அண்மையில் அவிசாவளை சுதந்திர வர்த்தக வலயத்தில்; பிஸ்கட்ஸ் ஏற்றுமதிக்கென பிரத்தியேகமான புதிய தொழிற்சாலை ஒன்றினை நிறுவியுள்ளது. ஏற்றுமதிக்கென பிரத்தியேகமான தொழிற்சாலையொன்றினை இலங்கையின் பிஸ்கட்ஸ் உற்பத்தி நிறுவனமொன்று நிறுவியமை இதுவே முதற்தடவையாகும். இந்த புதிய தொழிற்சாலை மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்நாட்டு பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்குவதுடன், வெளிநாட்டு வருவாயும் ஈட்டிக் கொடுக்கப்படுகிறது.
மேலும் முன்னணி சுப்பர் மார்கெட் தொடர்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கான உற்பத்தியை மேற்கொள்ளும் தனியார் லேபல் சப்ளையராகவும் மஞ்சி செயற்பட்டு வருகிறது. மஞ்சி உற்பத்தி வரிசைகள் Tesco போன்ற சர்வதேச சுப்பர் மார்கெட்டுகளில் விற்பனைக்குள்ளதுடன், வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து போன்ற நாடுகளிலுள்ள சுப்பர் மார்கெட்டுகளுக்கான தனியார் லேபல்; சப்ளையராகவும் விளங்குகிறது. மேலும் இந் நிறுவனம் USA, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின், முன்னணி விமான நிறுவனங்களில் தங்கள் உணவு தயாரிப்புகளுக்கான தனியார் முத்திரையிடல் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறது.
இலங்கையில் பிஸ்கட் ஏற்றுமதியில் மிகப்பெரிய சக்தியாக திகழும் மஞ்சி, ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு சந்தைகள் ஆகிய இரண்டிலுமே அதன் தலைமைத்துவத்தை நிரூபனம் செய்துள்ளது. CBL நிறுவனம் பல புத்துருவாக்கங்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளதுடன், பல்வேறு கௌரவமிக்க விருதுகளையும் வென்றுள்ளது.
சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் நிறுவனம், தொடர்ந்து நான்கு தடவைகள் தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் (NCE) வருடாந்த விருதுகள் வழங்கும் விழாவில் “வருடத்திற்கான மிகச்சிறந்த ஏற்றுமதியாளர்” க்கான தங்க விருதை தனதாக்கிக் கொண்டுள்ளது.
ஏற்றுமதியாளரொருவரின் சிறப்பான ஏற்றுமதி செயற்பாடுகளுக்கான கிடைக்கக்கூடிய அதியுயர் கௌரவமாக கருதப்படும் ஜனாதிபதி விருதினை CBL நிறுவனம் மூன்று வெற்றிகரமான விழாக்களில் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment