அமைச்சுப்பதவிதான் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு தேவையாக இருந்திருந்தால் இதற்கு முன் இருந்த ஜனாதிபதியின் ஆட்சிலே அதை பெற்றிருக்கும். பா.அரியநேத்திரன்
அமைச்சுப்பதவிதான் தமிழ்தேசிய கூட்டமைப்புக்குத் தேவையாக இருந்திருந்தால் இதற்கு முன் இருந்த ஜானதிபதியின் ஆட்சிலே அதனைப் பெற்றிருக்கும். என தழிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் வெள்ளிக் கிழமை (16) மட்டக்களப்பு மகிழடித்தீவு கண்ணகியம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்ற உறவுகளுடன் உறவாடுவோம் எனும், சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…….
தற்போது பலர் கூறுகின்றனர், அண்மையில் வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியிலே தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு அழைப்புக் கொடுத்தாலும் கூட அதை ஏன் அவர்கள் ஏற்கவில்லை, அதனை ஏற்றிருந்தால் எமது வடகிழக்கிலே இருக்கின்ற பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து சென்றிருக்கலாம். நீங்கள் அதை ஏன் மறுத்தீர்கள் என்ற கேள்விகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றது.
இதை மக்களாகிய நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். இந்த அமைச்சுப் பதவி என்பது இப்போது வந்திருக்கின்ற மாற்றத்தின் மூலமாக 100 நாள் வேலைத் திட்டத்திற்காக வழங்கப்பட்டதுதான் இந்த அமைச்சுப்பதவி. அந்த 100 நாட்களில் 8நாட்கள் சென்றுவிட்டது. இன்னும் இருப்பது 92நாட்கள் இந்த 92நாட்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு அமைச்சுப்பதவியை எடுத்திருந்தால் 100மீற்றருக்குரிய ஒரு கொங்கிறிட் வீதியை மட்டும் தான் செய்ய முடியுமே தவிர வேறொன்றுமே செய்ய முடியாது.
இதில் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அமைச்சுப் பதவிதான் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தேவையாக இருந்திருந்தால் நாங்கள் கடந்த தேர்தலிலே இதற்கு முன் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியிலே 04 பிரதான அமைச்சுப் பதவிகளையும் 04 பிரதி அமைச்சுப் பதவிகளையும் பெற்றிருப்போம்.
ஆனால் அமைச்சுப் பதவி எங்கள் பிரச்சினை இல்லை, கடந்த 65 வருடங்களாக புரையோடிப்போய் இருக்கின்ற எமது தமிழ் மக்களின் இன அழிப்பிற்கு பிற்பாடு பல தியாகங்களை செய்து இழந்திருக்கின்ற தியாகிகளின் தியாகத்தை நிலை நாட்டுவதற்காகத்தான் நாங்கள் அரசியல் பணி செய்து கொண்டிருக்கின்றோம். எனக் அவர் மேலும், குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment