மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி
ஒன்றியம் தைத்திருநாளைச் சிறப்பிக்கும் வகையில் பட்டிப்பளை பிரதேச
வேள்ட்விஸன் அபிவிருத்தி திட்டத்துடனும், மகிழடித்தீவு சிவநெறிக்கழக
அறநெறிப்பாடசாலையுடனும், இணைந்து நடத்திய உறவுகளுடன் உறவாடுவோம் எனும்,
சிறப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை (16) மகிழடித்தீவு கண்ணகி அம்மன் ஆலய
முன்றலில் இடம்பெற்றது.
இதன் போது தைத்திருநாள் சிறப்பு கவியரங்கு,
கிராமிய பாடல்களுக்கான அபிநயம், இனிமை பொங்கும் நாட்டார் பாடல்கள் என்பன
இடம்பெற்றதோடு, தீபாவளி சிறப்பு கவியரங்கு இறுவெட்டு வெளியீடும்
நடைபெற்றது.
பட்டிப்பளைப் பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி
ஒன்றிய தலைவர் த.மேகராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு
மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மகிழடித்தீவு கிராமத்தின்
பெரியோர்கள், இளைஞர் யுவதிகள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள்
என பலர் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment