23 Jan 2015

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு ஆதரவு வழங்கத்தயார்

SHARE
கிழக்குமாகாண சபையின் சமிபகால அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை தொடர்பிலும், அம்மாகாணத்தின் முதலமைச்சர் பதவிக்கான முரன்பாட்டு நிலை தொடர்பிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மிக ஆழ்ந்த கவனத்துடன் உற்றுநோக்கி வருகிறது. 

கிழக்குமாகாணத்தை முதற்தடவையாக ஆட்சிசெய்த கட்சி என்ற வகையிலும், தமிழ் மக்களின் கணிசமான ஆதரவைப்பெற்ற பொறுபபுமிக்க அரசியல் கட்சி என்ற வகையிலும் மக்கள் சார்ந்து எம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை நாம் ஒரு போதும் தட்டிக்களிக்கப் போவதில்லை. 

தேசிய அரசியல் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதாக கூறிக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் கிழக்குமாகாண ஆட்சி தொடர்பில் முரன்பட்டுக்கொள்வது வேதனையானது. மாகாணசபை முறைமையானது தமிழ் மக்களின் பெறுமதிமிக்க ஆயுதப்போராட்டத்தின் விலைப்பாடாக கிடைக்கப்பெற்றது என்பதிலும் அதில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள், அரசியல் உரிமைகள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் எமது கட்சி உறுதியாக இருந்து வருகின்றது.
 
கிழக்குமாகாண சபையில் தமிழர் ஒருவர் முதலமைச்சராவதற்கு யாருடனும் எத்தகைய விட்டுக் கொடுப்புடனும் செயற்பட நாம் தயாராக இருக்கின்றோம். கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழர்களின் கையிலிருந்த ஆட்சி அதிகாரத்தை எம்மவரே பிடுங்கி எடுத்த நயவஞ்சக அரசியலுக்கு இரையாகாமல் தூரநோக்குடன் செயற்பட நாம் தயாராக உள்ளோம்.
 
தற்போதய கிழக்குமாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையில் ஆட்சி அமைப்பதற்கும் அக்கட்சி சார்பான ஒருவர் முதலமைச்சராவதற்கும் எமதுகட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்க தயாராக உள்ளது.
 
தற்போதைய கிழக்குமாகாண ஆசனப்பங்கீடுகள் அடிப்படையில் த.தே.கூ 11ம், ஐ.தே.க 04ம், தமிழர் ஒருவர் முதலமைச்சராவதற்கு ஆதரவு தெரிவிக்கின்ற ஏனையசில மாகாணசபை உறுப்பினர்களது ஆதரவுடனும் எமது கட்சியின் இரண்டு உறுப்பனர்களது ஒத்துழைப்புடனும் கிழக்குமாகாண சபையில் தமிழ் தேசிய கூட்மைப்பினால் புதிய ஆட்சியை அமைக்க முடியும். இதனூடாக த.தே.கூட்டமைப்பு முதலமைச்சர்பதவி மாத்தரமன்றி நான்கு அமைச்சுக்களில் இரண்டு அமைச்சுப்பதவிகளையும் பெற்றுக் கொள்ளமுடியும். ஏனய அமைச்சுப்பதவிகளையும் தவிசாளர் பதவியினையும் ஐ.தே.க க்கும் ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கம் பகிர்ந்தளிக்க முடியும். எமது கட்சி அமைச்சுப் பதவிகளிலோ அல்லது எனைய பதவிகளிலோ இடம் பெறப்போவதில்லை.
 
எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு எஞ்சி இருக்கின்ற இரண்டரை வருடகாலப்பதியில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பு கூறூகின்ற நியாமான அரசியல் தீர்வினையும், அபிவிருத்தியினையும் பெற்றுக் கொடுக்க முடியும்.
 
பூ.பிரசாந்தன்
பொதுச்செயலாளர்
தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி
SHARE

Author: verified_user

0 Comments: