23 Jan 2015

மட்-வின்சென்ற் தேசிய பாடசாலை உயர்தரப் பரீட்சை முடிவுகளில் சாதனை

SHARE
- வரதன்- 
மட்-வின்சென்ற் தேசிய பாடசாலை உயர்தரப் பரீட்சை முடிவுகளில் சாதனை
கடந்த ஆண்டிற்கான மட்-வின்சென்ற் தேசிய பாடசாலை உயர்தரப் பரீட்சை முடிவுகளில் சாதனை படைத்துள்ளது. வெளியாகிய முடிவுகளின்படி மருத்துவத் துறைக்கு 09 மாணவிகளும் பொறியியல் துறைக்கு 03 மாணவிகளும் வர்த்தக முகாமைத்துவத் துறைக்கு 06 மாணவிகளும் கலைத்துறைக்கு 04 மாணவிகளும் பொதுத் துறைக்கு 09 மாணவிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

இதில் விஷேட திறமைச் சித்திகள் மூலம் மருத்துவத் துறைக்கு 06 மாணவிகளும் பொறியியல் துறைக்கு ஒருவரும் தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதே வேளை உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 04 மாணவிகளும் வர்த்தகப் பிரிவில் ஒருவரும் பொதுத் துறையில் ஒருவருமென 06 மாணவிகள் 3ஏ சித்திகள் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

இதில் பொறியியல் துறையில் பபிதா தட்சணாமூர்த்தி மாவட்டத்தில் 8வது நிலையும் மருத்துவத் துறையில் ஆர்திகா விக்னேஸ்வரன் மாவட்டத்தில் 2வது நிலையும் டீரோஜி அன்ரனி மாவட்டத்தில் 4வது நிலையும் சுஜித்ரா யோகேஸ்வரன் 7வது  நிலையும் பெற்றுள்ளதுடன் வர்த்தகப் பிரிவில் யாமினி புவிநாயகம் மாவட்டத்தில் 9வது நிலையும் வேறு பொதுத் துறையில் பிரபாந்தி நிதிபரன் மாவட்டத்தில முதலாவது நிலையை பெற்றுள்ளனர்.
சித்தி பெற்ற மாணவிகளை பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.




 
SHARE

Author: verified_user

0 Comments: