23 Jan 2015

சமாதான நீதவானாக வீ.ஆர்.மகேந்திரன் சத்தியப்பிரமாணம்

SHARE
மட்டக்களப்பு பழுகாமத்தினைச் சேர்ந்த வீ.ஆர்.மகேந்திரன் மாவட்டட சமாதான நீதவானாக மாவட்ட  நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்

இவர் தனது ஆரம்பக் கல்வியினை மட்.பழுகாமம் கண்மணி மகா வித்தியலத்திலும், உயர்தரக் கல்வியினை மட்.சிவானந்தா வித்தியாலயத்திலும் கற்றவராவார்.

இவர் போரதீவுப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளராகவும் லண்டன் அகிலன் பவுண்டேசன் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளராகவும் மனித உரிமைகள் அமைப்பின் மாவட்ட இணைப்பாளராகவும் இருந்து சமூகசேவை ஆற்றி வருகின்றார்;.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி மத்திய குழு உறுப்பினராகவும் இருத்து அரசியலுடான சேவைகளையும் மக்களுக்கு முன்னெடுத்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
SHARE

Author: verified_user

0 Comments: