நியூசிலாந்து
அணிக்கெதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்
லசித் மலிங்க களமிறங்குவார் என இலங்கை அணியின் பயிற்சியாளர் மாவன்
அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அத்தப்பத்து மேலும் தெரிவிக்கையில்,
இடது கணுக்காலில் ஏற்பட்ட பாதிப்பால்
மலிங்கவுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. தற்பொழுது அவர் ஓய்வு பெற்று
வருகிறார். இதன் காரணமாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக
இலங்கை அணி விளையாடிய தொடர்களிலும் விளையாடவில்லை. இந்நிலையில் மலிங்க
மீண்டும் இலங்கை அணியில் இணையவுள்ளார்.
தற்போது மலிங்க ஓய்வு பெற்று வருகிறார். எல்லாம் திட்டமிட்டபடி நடந்து வருகிறது. இதனையடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள இறுதி 2 ஒருநாள் போட்டிகளில் மட்டும் அவர் விளையாடவுள்ளார்.
தற்போது மலிங்க ஓய்வு பெற்று வருகிறார். எல்லாம் திட்டமிட்டபடி நடந்து வருகிறது. இதனையடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள இறுதி 2 ஒருநாள் போட்டிகளில் மட்டும் அவர் விளையாடவுள்ளார்.
மலிங்க, நுவன் குலசேகர ஆகிய இருவரும் உலகக்கிண்ண அணியில் இருப்பது அணிக்கு பலம் சேர்க்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான ஐந்து நாட்களை கொண்ட முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி கிறிஸ்ட் சேர்ச்சில் ஆரம்பமாகி 30 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது(nl)
இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான ஐந்து நாட்களை கொண்ட முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி கிறிஸ்ட் சேர்ச்சில் ஆரம்பமாகி 30 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது(nl)
0 Comments:
Post a Comment