25 Dec 2014

டெல்லியில் மூடுபனி காரணமாக வழமையான நிலை ஸ்தம்பிதம்!

SHARE
இந்தியாவின் டெல்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முதல் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன்காரணமாக ரயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.  70 க்கும் மேற்பட்ட ரயில்கள், 173 விமான சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டன.

புவனேஸ்வரம், சீல்டா, ராஞ்சி ஆகிய நகரங்களில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் ராஜ் தானி ரயில்கள் 4 மணி நேரம் தாமதமாக டெல்லி வந்தடைந்தன. பல்வேறு எக்ஸ்பிரஸ்கள் 18 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன.

மூடுபனி காரணமாக அதி காலையில் புறப்பட வேண்டிய பல்வேறு ரயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டன. இதனால் டெல்லி உட்பட வடமாநில ரயில் நிலையங் களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
விபத்துகளை தவிர்க்க ரயிலை மிதமான வேகத்தில் இயக்க என்ஜின் டிரைவர்களுக்கு ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.

இதேபோல் டெல்லிக்கு வந்து செல்லும் சுமார் 173 க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் தாமதமாக இயக்கப்பட்டன. டெல்லியில் சுமார் ஐந்து வருடங்களின் பின்னர் இவ்வாறான அதிக குளிர் நிலவியுள்ளது . நேற்று 4.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. காலை 9 மணிக்கு பிறகே சாலைகளில் பனிமூட்டம் விலகி போக்குவரத்து சீராகியுள்ளதாக இந்திய செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன(nl)
SHARE

Author: verified_user

0 Comments: