25 Dec 2014

மீண்டும் அம்பாசிடராக சச்சின் டென்டுல்கர் - ஐசிசி தெரிவு

SHARE
இந்திய கிரிக்கெட்டின் சிறந்த சகல துறை ஆட்டக்காரரான சச்சின் டெண்டுல்கர், 2015 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இப் போட்டி பெப்ரவரி 14 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 29 ஆம் திகதி வரை இடம்பெறும். கிரிக்கெட்டிலிருந்து விலகி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் சச்சினை இதன் மூலம் விளையாட்டுக் களத்திற்கு மீண்டும் கொண்டு வந்துள்ளது ஐசிசி நிறுவனம்.

இருப்பினும் சச்சின் துடுப்பாட்டத்தில் ஈடுபட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சினை அம்பாசடராக நியமிக்கும் அறிவிப்பை துபாயில் வைத்து ஐசிசி வெளியிட்டுள்ளது. சச்சின் 2 ஆவது முறையாக தொடர்ந்து பிராண்ட் அம்பாசடராக நியமிக்கப்படுகிறார்  என்பது விசேட அம்சமாகும்.

கடந்த முறை 2011 ஆம் ஆண்டு, இந்தியா, பங்களாதேஷ், இலங்கை இணைந்து நடத்திய உலகக் கோப்பைத் தொடருக்கும் இவரே அம்பாசடராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் இரண்டாவது முறையாக அம்பாசிடராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சச்சின் கடந்த ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவர். 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ரி டுவென்டி 20 போட்டிகளில் இவர் ஆடியுள்ளார். இவரது ஓட்ட எண்ணிக்கை குவியல்கள் மிகவும் பெரியது. கிட்டத்தட்ட 24 வருடம் கிரிக்கெட் ஆடி வந்த சாதனையாளர் சச்சின். சர்வதேச போட்டிகளில் மொத்தமாக 34, 357 ரன்களைக் குவித்துள்ளார் சச்சின். இதில் 100 சதங்களும் அடக்கம். உலகக் கோப்பைக்காக மொத்தம் 6 உலகக் கோப்பைப் போட்டித் தொடர்களை சச்சின் சந்தித்துள்ளார். 6 ஆவது முறைதான் கடைசி முயற்சியாக 2011 இல் நடந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் பங்குபற்றியுள்ளார்.

அதிலும் 2003 போட்டித் தொடரில் இவர் 673 ரன்களை குவித்து அசத்தியிருந்தார். இது குறித்து சச்சின் கருத்து தெரிவிக்கையில், பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவி்த்துள்ளார். இதை கெளரவமாக கருதுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்(nl)
SHARE

Author: verified_user

0 Comments: