நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில்
துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும்
பறிகொடுத்துள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு இலங்கை அணி கிரிக்கெட் சுற்றுப் பயணம் செய்துள்ளது.
இதில் முதலாவதாக நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஏழு ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடர் இடம்பெறுகின்றது.
நேற்று கிறைஸ்ட் சர்ச்சில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, பிரன்டன் மெக்கலம் அதிரடியான ஆட்டத்தை வௌிப்படுத்தினார்.
134 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 சிக்ஸர்கள் 18 பவுண்டரிகள் அடங்களாக 195 ஓட்டங்களை பெற்று ஐந்து ஓட்டங்களால் இரட்டைச் சதத்தைத் தவறவிட்டார்.
இதன்படி நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்த அந்த அணி 429 ஓட்டங்களை விளாசியது.
பின்னர் இரண்டாம் நாளான இன்று தொடர்ந்தும் ஆடிய நியூசிலாந்து 441 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணி சார்பில் மெத்தியூஸ், சுரங்க லக்மால் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர். மேலும் சமிந்த எரங்க, தம்மிக்க பிரசாத் மற்றும் தரிந்து குஷல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
பின்னர் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி சார்பில் அதிக பட்சமாக மெத்தியூஸ் 50 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
ஏனைய வீரர்கள் எவரும் அவ்வளவாக பிரகாசிக்காத நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை 138 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இதனையடுத்து 303 ஓட்டங்களால் நியூசிலாந்து முன்னிலையில் இருக்க இலங்கை தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.(ad)

0 Comments:
Post a Comment