18 Dec 2014

ஆக்கத்திறன் அபிவிருத்தி தொடர்பான பயிற்சி

SHARE
தேசிய முன்பிள்ளை அபிவிருத்தி வாரத்தையொட்டி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியைகளுக்கான ஆக்கத்திறன் அபிவிருத்தி தொடர்பான பயிற்சிச் செயலமர்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை(16) நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பயிற்சியின் வளவாளர்களாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிமனையின் அழகியற் கற்கைகளுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன், முன்பள்ளிப் பிரிவிற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.தர்மபாலன், தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் நாடகமும் அரங்கியலும் பாட ஆசிரியர் யு.சுமன் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சிச் செயலமர்வை நடாத்தி வைத்தனர்.

நடைபெற்ற பயிற்சியில் உடல்மொழி அசைவுகளோடு கூடிய கற்பித்தல் திறன் தொடர்பான பயிற்சிகள் சிறப்பிடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேசிய முன்பிள்ளை அபிவிருத்தி வாரமானது இம்மாதம் 14 முதல் 20 ஆந்திகதி வரை நாடளாவிய ரீதியில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் சிறுவர்களுக்கான செயலகத்தினால் நடைமுறைப்படுத்துகின்றது.
SHARE

Author: verified_user

0 Comments: