18 Dec 2014

கிராமப்புற மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்த வேண்டும் -ஜாஹிர்,

SHARE
கிராமப்புற மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  கரங்களை அனைவரும் பலப்படுத்த வேண்டும் என தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதியமைச்சர் கலாநிதி சரத் வீரசேகரவின் இணைப்பாளரும் காரைதீவு ஸ்ரீ லங்;கா சுதந்திரக்கட்சியின்  அமைப்பாளரும் ஏ.எம்.ஜாஹிர், செவ்வாய்க்கிழமை (16)  தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாளிகைக்காட்டில் நடைபெற்ற மத்திய குழுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த நாட்டிலுள்ள  நகரப்புற மக்கள் அனுபவித்துவரும் சகலவிதமான வசதிகளையும் சலுகைகளையும் கிராமப்புற மக்களும் அனுபவிக்க வேண்டும் என்ற சிந்தனையில், அந்த மக்களின் காலடிக்கே சேவை சென்றடைய வேண்டும் என்பதற்காக  கமநெகும, ஜாதிக சவிய, மகநெகும, நகனஹிர நவோதய  என்று பல்வேறு வகையான செயற்றிட்டங்களை அறிமுகப்படுத்தி அதில் ஜனாதிபதி வெற்றியும் கண்டு வருகின்றார்.

அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பலராலும் பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்பட்டு வந்த மக்கள் இந்த அரசாங்கத்தின் கீழ் பல நன்மைகளைப் பெற்று வருகின்றனர்.

இதனை  பெற்றுக் கொள்வதற்கு காரணமாக அமைந்த ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாம் அனைவரும் இன மத வேறுபாடுகளுக்கப்பால் ஆதரித்து, பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் வெற்றியடையச் செய்து மீண்டும் இந்த நாட்டில் ஏழைகளுக்கு ஒளியுட்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும்.

எதிரணியினர், ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டிருக்கும் பொய் பிரசாரங்கள் தவிடுபொடியாகும் வண்ணம் தமது வாக்குப் பலத்தை பயன்படுத்த வேண்டும்.

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் குறிப்பிட்டது போன்று சகல விடயங்களையும் மிகவும் சீராக முன்னெடுத்துச் செல்வதுடன் நாட்டின் அபிவிருத்தியே தனது பிரதான குறிக்கோளாகக் கொண்டு ஜனாதிபதி செயற்படுகிறார்.

அவர் வீதிக்கு வீதி மேடைக்கு மேடை இனத்திற்கு இனம் வௌ;வேறு கருத்துக்களைத் தெரிவிக்காமல் ஒரே கருத்தையே தெரிவித்து வருகின்றார்.
மிகவும் பினதங்கிய நிலையில் காணப்பட்ட மாளிகைக்காடு பிரதேசம் மஹிந்த சிந்தனையின் கீழ் மிகவும் சிறந்த முறையில் அபிவிருத்தி கண்டுவருவது மிகவும் மகிழ்சியைத் தருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அனுபவித்து வந்த பல இன்னல்களையும் துன்பங்களையும் தனது புத்திசாதுரியத்தினாலும்; முடிவுக்கு கொண்டுவந்த ஒரே தலைவர் என்பதனை எவராலும் மறக்க முடியாது.

இந்த தேர்தல் உண்மையிலேயே இந்த நாட்டிலுள்ள நாட்டுப்பற்றுள்ள அனைத்து இன மக்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவுக்கு நன்றி செலுத்தும் ஒரு சந்தர்ப்பமாகவே அமையவுள்ளது  என்று தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: