ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஏகமனதாக மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு
மக்கள் தீர்மானித்துள்ளதாக தேசிய காங்கிரஸின் தலைவரும உள்ளூராட்;சி மாகாண
சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கான தேசிய காங்கிரஸின் பிரதேச தேர்தல் காரியாலயம் செவ்வாய்க்கிழமை (16) அக்கரைப்பற்றில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டில் மீண்டுமொரு யுத்தத்தை உருவாக்க வேண்டுமென்று சில சதிகார சக்திகள் ஒன்றிணைந்து திட்டங்களை தீட்டி வருகின்ற வேளையில் மக்கள் அதனை நிராகரித்து விட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றார்கள்.
எதிரணி மக்கள் மத்தியில் செயலிழந்து போய் உள்ள நிலையில் பெரும்பாலான அரசியற் கட்சிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் வருகின்றார்கள்.
மைத்திரியின் மீது நம்பிக்கை இழந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது ஆதரவை வழங்க முன் வந்துள்ளார்கள்; என்றார்.
இவ் வைபவத்தில் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.அகமட் சக்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment