மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்
முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டம் சத்துருக்கொண்டான்
மாவட்ட விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (02) காலை
ஆரம்பித்துவைக்கப்பட்டது.
தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு, மண்முனை மேற்கு, மண்முனைப்பற்று, காத்தான்குடி ஆகிய பிரதேச செயலக விதாதாவள நிலையங்கள் இணைந்து இந்த செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது.
மண்முனை வடக்கு விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் வளர்மதி நிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், காத்தான்குடி உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.கருணாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் 130 பயனாளிகள் கலந்துகொண்டதுடன,; வீட்டுத்தோட்டம், உணவு பதனிடல் போன்ற செயன்முறைப்பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.

0 Comments:
Post a Comment