3 Dec 2014

விவேகானந்த தொழிநுட்ப கல்லுரிக்கு கணணிகள் அன்பளிப்பு

SHARE
(அரும்பு) 
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் உள்ள விவேகானந்தா தொழிநுட்ப கல்லுரிக்கு கணிணி பயிறுசி நெறிகளுக்கு அதிகளவான அதிகளவு பயிலுனர்களின் விண்ணப்பங்கள் கிடைத்தாலும் போதியளவு கணிணி வசதிகள் இன்மையால் குறிப்பிட்ட பயிலுனர்களுக்கே பயிற்சியினை மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது.
அந்த வகையில் கல்லுரிக்கு அத்தியவசிய தேவையாக இருந்த கணிணி இயந்திரங்களை பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் சுதாகரன் சறோ தம்பதிகளிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று உடனடியாக எமக்கு அவற்றினை பிரான்ஸ் நாட்டிலிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் பிரகாரம் சுதாகரன் சறோ தம்பதிகளிடம் இருந்து ஒன்பது கணிணிகளும்  சிவனேசன் பிரதீப் அவர்களிடமிருந்து மூன்று கணிணிகளையும் வழங்கியுள்ளனர்.
இவர்களைப் போன்ற நல் உள்ளங்களின் ஆதரவாலும் உதவியினாலுமே இக்கல்லுரியினை நடாத்தக் கூடியதாக உள்ளதாகவும் எம் புலம்பெயர் மக்களின் ஆதரவு உள்ளவரை இன்னும் சிறப்பான நிலைக்கு இக்கல்லுரியினை கொண்டு வர முடியும் என்றும் இதன் பணிப்பாளர்  நம்பிக்கை தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: