3 Dec 2014

எந்தவொரு சமூகத்தில் கலாசாரம் சரியாக கட்டியெழுப்பப்படவில்லையோ, அந்த சமூகத்தில் விலங்குகளுக்குரிய பண்புகளைத்தான் காணமுடியும்

SHARE
உலகில் மனிதன் என்பவன்  சாதாரணமாக சமூகமயப்படுத்தப்பட்ட விலங்கு. இவ்வாறு விலங்கு நிலையில் இருக்கின்ற மனிதனை மனிதன் என்னும் உயரிய நிலைக்கு இட்டுச்செல்வது அவனது கலாசார பண்புகளே என்று திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தெரிவித்தார்.

எந்தவொரு சமூகத்தில் கலாசாரம் சரியாக கட்டியெழுப்பப்படவில்லையோ, அந்த சமூகத்தில் விலங்குகளுக்குரிய பண்புகளைத்தான் காணமுடியும் எனவும் அவர் கூறினார்.

செவ்வாய்க்கிழமை (02)  திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலை, இலக்கிய நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போது இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'ஒவ்வொரு இனமும் தனது கலாசார பண்பாட்டு விழிமியங்களை ஒழுங்காக பின்பற்றுகின்றபோதுதான் அந்த இனம் தப்பித்துக்கொள்ளமுடியும். மனிதன் தொடர்ந்து சிறப்பாக வாழவேண்டுமென்றால், அவனின் கலாசார நியமங்கள் கட்டியெழுப்பப்படவேண்டும். அதனுடாகவேதான் அவனின் இருப்பை உறுதிசெய்துகொள்ளமுடியும். இவ்வாறு ஒரு சமூகம் கலாசார ரீதியாக பின்தங்கிக் காணப்படுமானால்,  அந்த சமூகம் நலிவடைந்துசெல்லக்கூடிய நிலைதான் தோற்றம் பெறும்.அந்த வகையில் கலாசாரம் என்பது எந்தவொரு சமூகமாக இருந்தாலும், அந்த சமூகத்திற்கு கலாசாரம் முக்கியவிடயமாகஅமைந்துள்ளது.

அத்துடன், கலாசாரமென்பது அறிவினுடைய பொக்கிஷமாகும். ஒரு மனிதனுடைய மனப்பாங்கு நன்மதிப்பு என்பனவற்றை பெற்றுக்கொடுப்பது இந்தக் கலாசாரம் ஆகும். எனவே ஒவ்வொரு மனிதனும் கலாசாரப் பண்புகளை பேனுவதன் ஊடாக தனது மதிப்பையும் தனது இனத்தின் இருப்பையும் உறுதிசெய்துகொள்ளவேண்டும். வெறுமனே கலாசார நிகழ்வுகளை நடத்தி பரிசுகள் வழங்குவதோடு மட்டும் நாம் நின்றுவிடாது இளைஞர்கள் தமது கலாசார பண்பாட்டு விழுமியங்களை நன்கு தெரிந்துகொண்டு நாளைய சமூதாயத்தினருக்கும் எமது கலாசார விழிமியங்களை கொண்டுசெல்வதற்கு முயற்சிகளைமேற்கொள்ளவேண்டும்' எனக் கூறினார்.
SHARE

Author: verified_user

0 Comments: