தமிழ் மக்கள் நிம்மதியாகவும் பாதுகாப்புடன் கூடிய மகிழ்சியுடனும்
தொடர்ந்து வாழ வேண்டுமேயானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு
வாக்களியுங்கள்'என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன
தெரிவித்தார்.
'கடந்த காலங்களைப் போன்று தவறாக சிந்தித்து செயற்படுவோமேயானால் தமிழ் மக்களின் வாழ்வு சீரழிந்து செல்லும் நிலைமையே தோன்றும். இதனைக் கருத்திற் கொண்டு ஒவ்வொரு தமிழ் மக்களும் சுயமாக சிந்தித்து செயற்படவேண்டும்' எனபி.எச்.பியசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வறிய மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச திவிநெகும அதிகாரி வி.அரசரெத்தினம் தலைமையில் செவ்வாய்க்கிழமை(9) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றியஅவர்,
'நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் யாருக்காவது வாக்களியுங்கள். ஆனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பாதுகாவலனாக இருந்து வருபவரும் தொடர்ந்தும் இருக்க கூடியவருமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பதன் மூலம் உங்களின் நன்றி உணர்வையும் விசுவாசத்தையும் வெளிக்காட்டவேண்டும்.
இதற்கு உங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் இந்தசந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜனாதிபதியை வெற்றிப்பெறச் செய்து எமது குழந்தைகளின் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் எமது பாதுகாப்பையும் நாட்டின் பாதுகாப்பையும் உறுதிசெய்து கொள்ளவேண்டும்.
தொடர்ந்தும் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் நிறைவேறாத கொள்கைகளுக்கும் நடைமுறை வாழ்க்கைக்கு உதவாத சிந்தனைகளில் இருந்து விடுபட்டு சுயமாகசிந்தித்து செயற்படுவதற்கு முன்வரவேண்டும். அப்போதுதான் நாம் அனைவரும் இந்தநாட்டில் பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழமுடியும் என பியசேன மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் எதிர்க்கட்சித்தலைவர் எஸ்.விக்னேஸ்வரன், திருக்கோவில் பிரதேசசிவில் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் எஸ்.பி.சீலன் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்

0 Comments:
Post a Comment