தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் பாடசாலை மாணவர்களிடையே இடம்பெற்ற டெங்கு விழிப்புணர்வுப் போட்டிகளில் தம் புலமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பணப்பரிசும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.
இது விடமாக பாராட்டி பணப்பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வு ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிகாரிப் பணிமனையின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை 24.07.2018 இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளில் டெங்கு விழிப்புணர்வைத் கட்புலக் காட்சிகளில் சித்திரமாக வரைந்து வெளிப்படுத்தி போட்டியில் வெற்றி பெற்ற மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் கோட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு பணப்பரிசும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் ஏறாவூர் நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித், ஏறாவூர் நகர பிரதேச செயலக தலைமை கிராம சேவகர் நிருவாக அலுவலர் கபீர் முஹம்மத் உட்பட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்ப நல மருத்து மாதுக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment