16 Jun 2026

பிளாட்டினம் விருது வென்ற களுவாஞ்சிகுடி எஸ்.என்.எலக்றிக்ல் உரிமையாளர் சிதம்பரநாதன்.

SHARE

பிளாட்டினம் விருது வென்ற களுவாஞ்சிகுடி எஸ்.என்.எலக்றிக்ல் உரிமையாளர் சிதம்பரநாதன். 

2026 ஆம் ஆண்டு சிங்கர் நிறுவனத்தினால் அகில இலங்கை ரீதியில் அதிகூடிய விற்பனை  மேற்கொண்டமைக்காக தெரிவு செய்யப்பட்ட பத்து வியாபார உரிமையாளர்களுக்கான பிளாட்டினம் விருது வழங்கும் திட்டத்தின்கீழ் களுவாஞ்சிகுடி வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள எஸ்.என்.எலற்றிக்கல் இம்முறை தெளிவாகியுள்ளது. 

அதனடிப்படையில் அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பத்து வியாபார நிலைய உரிமையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு சிங்கர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்; இடம்பெற்றது. இதன்போது களுவாஞ்சிகுடி எஸ்.என்.எலக்றிக்ல் உரிமையாளர் க.சிதம்பரநாதனுக்கு  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, அவருக்கு ஒரு வாரகாலம் இங்கிலாந்திற்கு சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. 

தனது கடின உழைப்பின் பிரகாரம் பெரியவியாபார நிலையங்களுடன் பேட்டியிட்டு இந்த விற்பனை சாதனையை நிலை நாட்டியுள்ளதாக  களுவாஞ்சிகுடி எஸ்.என்.எலக்றிக்ல் உரிமையாளர் க.சிதம்பரநாதன் தெரிவிக்கின்றார்.







SHARE

Author: verified_user

0 Comments: