12 Jun 2026

ஊடகவியலாளர்களுக்கு AI தொடர்பான பயிற்சி.

SHARE

ஊடகவியலாளர்களுக்கு  AI தொடர்பான பயிற்சி.

ஊடகத்துறையில் AI தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி திறம்படச் செயற்படுவது தொடர்பான பயிற்சி நெறி ஒன்று வியாழக்கிழமை(11.06.2026) மட்டக்களப்பில் நடைபெற்றது. 

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் அமைந்துள்ள ட்றீம்ஸ் அக்கடமி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் நோர்வேயிலிருந்து வருகைதந்த சிரேஸ்ட ஊடகவியலார்களும், AI தொழில் நுட்பத்தில் தேற்சி பெற்ற பயிற்றுவிப்பாளருமான என்.சரவணன் இதன்போது கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார். 

ஊடகவியலார்கள் தாங்கள் தார்ந்த அச்சு இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகத்துறைகளில் எவ்வாறு AI தொழில் நுட்பத்தைப் பாவிப்பது, AI தொழில் நுட்பத்தைப் பாவிப்பதன் மூலம், ஊடகத்துறையில் இலகுவான வழிவகைகளைக் கையாளுதல், போன்ற பல விடையங்கள் இதன்போது மிகவும் விரிவாக விளக்களிப்பட்டன.









SHARE

Author: verified_user

0 Comments: