.jpg)
சமூர்த்தி அதிகார சபையில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக
கடமையாற்றி சுய விருப்பத்தின் பேரில் சேவையிலிருந்து விலகிச் சென்றுள்ள 31
சமூர்த்தி அபிவிருத்தி அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர்களுக்கான பணிக்கொடை
கொடுப்பனவுகள் இம்மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படவுள்ளதாக,
திவிநெகும திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப்பணிப்பாளர் ஐ.அலியார்
திங்கட்கிழமை(8) தெரிவித்தார்.
இவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் பணிக்கொடை
போன்ற கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாகவும் பிரதிப் பணிப்பாளர் ஐ.அலியார்
மேலும் கூறினார்.
திவிநெகும திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட வலய அலுவலகங்கள் ஊடாக
இக்கொடுப்பனவுகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப்
பணிப்பாளர் ஐ.அலியார் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment