9 Dec 2014

காத்தான்குடி பிரதேச கலை இலக்கிய விழா

SHARE
காத்தான்குடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து வருடா வடுடம் நடாத்திவரும் 2014 பிரதேச கலை இலக்கிய விழாவும்,ஸம்ஸம் சிறப்பு மலர் மற்றும் கலாசார கண்காட்சி இறுவட்டு வெளியீடும் 09-12-2014 இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இதன் போது கலைஞர்கள் கௌரவம் இடம்பெற்றது இதில் நகைச்சுவை துறைக்காக ரீ.எல்.அப்துல் அஸீஸூம், கவிதை துறைக்காக எச்.எம்.முஹம்மது றஹீமும், பாடல் துறைக்காக எம்.ஐ.முஹம்மது முஸம்மிலும், ஒவியத் துறைக்காக எம்.கே.பதுர்தீனும், ஊடகத் துறைக்காக எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸூம், இலக்கிய துறைக்காக எம்.எஸ்.முஹம்மது முகைதீனும், அறிவிப்பு துறைக்காக எம்.ஐ.முஹம்மது கமால்தீனும் , கவிதை துறைக்காக இல்மி அஹமட் லெவ்வையும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அதிதிகளினால் பொன்னாடை போர்த்தப்பட்டு விருதும், பட்டமும்,சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இங்கு ஸம்ஸம் சிறப்பு மலர் மற்றும் கலாசார கண்காட்சி இறுவட்டு ஆகியவற்றின் முதற்பிரதி காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கரினால் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதில் ஸம்ஸம் சிறப்பு மலர் தொடர்பான நூல் நயவுரையை கவிமணி மௌலவி எ.எச்.எம்.புகாரி (பலாஹி) நிகழ்த்தினார்.
அத்தோடு கலாசார போட்டிகளில் பங்குபற்றிய கலைஞர்கள்,பாடசாலை மாணவ மாணவிகள் ஆகியோருக்கு சான்றிதழும்,பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,மட்டக்களப்பு ,காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவரும்,காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி), காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர்,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.கருணாகரன், பிரதேச கணக்காளர் எஸ்.ரூபாகரன், மேலதிக மாவட்ட பதிவாளர் ஜெ.பைறூஸ், மாவட்ட கலாசார இணைப்பாளர் ரீ.மலர்ச்செல்வன், காத்தான்குடி பிரதேச கலாசார உத்தியோகத்தர் எம்.எச்.ஜாவித் உட்பட ஊடகவியலாளர்கள் பிரதேச செயலக அதிகாரிகள்,திவிநெகும உத்தியோகத்தர்கள் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: