17 Jun 2026

களுதாவளையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த 50 கிலோ பழங்கள் கைப்பற்றப்பட்டு அழிப்பு.

SHARE

களுதாவளையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த 50 கிலோ பழங்கள் கைப்பற்றப்பட்டு அழிப்பு.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் இடம்பெற்று வருகிறது. இவ்வாலய வீதியில் நாட்டின் நாலாபாகங்களிலுமிருந்து வியாபாரிகள் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்களுக்கு தீங்கில்லாத உணவுப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதார பிரிவினரால் விசேட உணவுப் பாதுகாப்பு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மேற்பார்வை சுகாதார பரிசோதகர், பிரதேச சுகாதாரப் பரிசோதகர் அடங்கிய குழுவினரால் ஆலய வளாகத்தில் மக்களின் நலன்கருதி செவ்வாய்கிழமை(16.06.2026) மாலை மேற்கொள்ளப்பட்ட உணவுப்பரிசோதனையின்போது வெளிமாவட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்டு மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற வகையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பப்பாழி பழம், மாம்பழம், யானைக் கொய்யா, வாழைப்பழம் ஆகிய பழுதடைந்த 50 கிலோ பழங்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டு உடன் அழிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆலய உற்சவ காலங்களில் தொடர்ச்சியாக சுகாதார பரிசோதகர்களால் உணவுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









 

SHARE

Author: verified_user

0 Comments: