24 Dec 2014

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 26463பேர் பாதிப்பு 3237பேர் தற்காலிக முகாமில்

SHARE
துசா-

தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் இதுவரை 7770குடும்பங்களைச் சேர்ந்த 26463பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசடித்தீவு, முதலைக்குடா, அம்பிளாந்துறை, பட்டிப்பளை, மகிழடித்தீவு கடுக்காமுனை ஆகிய இடங்களில் தற்காலிக முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இம் முகாம்களில் 900குடும்பங்களைச் சேர்ந்த 3237பேர் தங்கியிருக்கின்றதுடன், 328குடும்பங்களைச் சேர்ந்த 954பேர் தங்களது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருக்கின்றனர்.

இதுவரை பிரதேசத்தில் 100வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 631வீடுகள் பாதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
பாதிக்கப்பட்டு முகாம்களில் உள்ள மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
SHARE

Author: verified_user

0 Comments: