நாடு பூராகவும் இடம்பெற்று வரும் கடும் மழை காரணமாக மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் கடும் மழை மட்டக்களப்பு மாவட்டத்தினையும் விட்டு வைக்கவில்லை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் கடும் மழையினால் பல தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டு இதன் காரணமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு கதிரவெளி தொடக்கம் பட்டிருப்பு வரையில் பல முகாம்களில் மக்கள் இவ்வாறு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிப்புக்குள்ளான மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான துரைராசிங்கம், துரைரெட்ணம், பிரசன்னா, வெள்ளிமைல, நடராசா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து அவ்விடத்திலேயே உரிய அதிகாரிகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மாகாணசபை உறுப்பினர்கள் கடந்த 20ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை சுமார் 22 அகதி முகாம்களுக்கு சென்று பார்வையிட்டு மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment