மட்டக்களப்பு மாவட்டதில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது நிலையிலும், நேற்று செவ்வாய்க் கிழமை இருந்த இடைத்தங்கல் முகாம்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்றயதினம் (24) மட்டக்களப்பில் மழை குறைந்து காணப்பட்டதனையும் அவதானிக்க முடிந்தது. அந்த வகையில் நேற்று காலை 8.30 மணியிலிருந்து இன்று காலை 8.30 மணிவரையான கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்ப மாவட்டத்தில் 31.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வாநிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் கூறினார்.
இருந்த போதிலும் மழை வெள்ளத்தினால் பல கிராமங்களின் உள் வீதிகளின் போக்குவரத்துக்களிலும் பல சிரமங்களை இன்றும் மக்கள் எதிர் கொண்டதனையும் அவதானிக்க முடிந்தது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றய வெள்ள அனர்த்த பாதிப்பு தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 328 கிராம சேவையாளர் பிரிவுகளில், 124071 குடும்பங்களைச் சேர்ந்த 443691 நபர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
மேலும் மாவட்டத்திலல் 12012 குடும்பங்களைச் சேர்ந்த 41419 நபர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் மாவட்டத்தின் ஆங்காங்கே காணப்படுகின்ற பொதுக்கட்டிடங்களிலும், பாடசாலைகளிலும், 103 நலம்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவற்றினைவிட 38329 குடும்பங்களைச் சேர்ந்த 136184 நபர்கள் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து அவர்களது நண்பர்கள் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
நலம்புரி நிலையங்களில் தங்க வைக்கப் பட்டுள்ள மக்களுக்கு உரிய பிரதேச செயலகங்கள் ஊடாக சமைத்த உணவுகள் வழங்கப் பட்டு வருவதோடு,
53129 குடும்பங்களைச் சேர்ந்த 136179 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதார ரீதியாகவும் பாத்திப்படைந்துள்ளதாக மேற்படி மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ள இந்நிலையில்
துற்போதைய வெள்ள அனர்த்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 3361 வீடுகள் முழு அளவிலும், 6736 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment