30 Nov 2014

டெங்கு ஒழிப்பு சிரமதானம்

SHARE
அம்பாறை, சவளக்கடை பொலிஸார்,  சிவில் பாதுகாப்பு குழு மற்றும் பொது மக்கள் இணைந்து ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு சிரமதானம் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்றது.

இதன்போது வீரத்திடல் மஸ்ஜிதுல் மபாஸா ஜூம்மா பள்ளிவாசல் வாளாகம், மையவாடி மற்றும் பிரதேசத்தின் இருமருங்கிலுமுள்ள பற்றைக்காடுகள் வெட்டப்பட்டு டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்கள் தூப்புரவு செய்யப்பட்டதுடன் சேகரிக்கப்பட்ட பொருட்கள் தீயிட்டு அழித்தொழிக்கப்பட்டன.

சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீம் தலைமையில் நடைபெற்ற சிரமதானத்தில்,  சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்கள், பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், பிரதேச பொதுமக்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: