30 Nov 2014

SHARE
17 ஆவது யாப்பு திருத்தத்துக்கு ஆதரவளித்தமை வரலாற்றுத்தவர் என முஸ்லிம் தலைமைகள் மேடைமேடையாகக் கூறிக்கொண்டு மேலும் மேலும் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கறார்கள்' என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக ;கட்சின் அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.எம்.மகரூப் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதிரித்து ஞாயிற்றுக்கிழமை(30) நடைபெற்ற கிண்ணியா பிரதேச ஆசிரியர்கள் மற்றும் கல்வியியலாளர்களுடனான சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்.

கிண்ணியா ஹிஜ்ரா வீதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. இதில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாடுகள் இந்த நாட்டின் முஸ்லிம்கள் மத்தியில் பாரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாரானதொரு நிலைமையை இந்த நாடு பலமுறை சந்தித்திருக்கின்றது. இனக்குரோத வெளிப்பாடு என்பது இந்த நாட்டுக்கு புதுமையான விடயம் அல்ல.

1883 ஆம் ஆண்டு இந்த நாட்டை ஆங்கிலேயர் ஆட்சி செய்கின்றபோது அநாகரீக தர்மபால போன்றோர்களால் சிங்களவர்கள் தூண்டப்பட்டு ஒரு பாரிய இனக்கலவரம் ஏற்பட்டது.

இதன்பிறகு 1815 ஆம் ஆண்டு அதே தர்மபாலா போன்றோர்களால் பௌத்த சிந்தனை என்ற போர்வையில் இனத் துவேசத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்காக முஸ்லிம்களுக்கு எதிராக இனக்கலவரத்தை ஏற்படுத்தினர்.

1983 இல் சிங்கள தமிழ் குழப்பம். 2014 இல் காலியில் குழப்பம்,  இந்த குழப்பங்கள் அனைத்தையும் ஏற்படுத்தயவர்கள் மதவாதிகளான இந்த சேனாக்கள்கள்தாம்.

இவ்வாறு தமிழ் சிங்கள குழப்பங்களை உருவாக்கி வாக்குளைப் பெறமுடியாது என்ற உண்மையை வடமாகாண சபைத் தேர்தல் அவர்களுக்குச் சொல்லிவிட்டது.

நூறு மீற்றருக்கு ஒரு இராணுவ முகாம், நூறு அடிக்கு ஒரு பொலிஸ்; நிலையம் இருந்தும்கூட அங்கு வெற்றி பெற முடியல்லை.

அரசாங்கத்துக்கு எதிராக 86 வீதமான வாக்குகளை தமழ் மக்கள் அளித்தார்கள். இதன்மூலம் அச்சுறுத்தல்களுக்கு மத்தியல் சிறுபான்மையினரின்  வாக்குகளை பெற முடியாது என்ற செய்தியை தமிழ் மக்கள் கொடுத்துள்ளார்கள்.

நடந்து முடிந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் மலையக மக்களும் தெளிவான பதிலை அரசுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

தனிச்சிங்கள மாவட்டமாக இருக்கன்ற மொனராகலயில் ஐக்கிய தேசய கட்சக்கு 56 ஆயிரம் வாக்குகள் அதிகரித்திருக்கின்றது.
பதுளை மாட்டத்தல் சிங்கள மக்களின் வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு என்றுமில்லாதவாறு அதிகாத்திருக்கன்றது. இதன் மூலம் இந்த மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 41 வீதமான வாக்குகள் திடீரென அதிகரித்திருக்கின்றது.

அதற்கு முன்னர் நடைபெற்ற ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலே 50 வீதமான மக்கள் வாக்களிக்கவில்லை.

ஜனாதித தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரின் கன்னி உரையை மக்கள் கேட்டமுடியாது ஊடகச் சுதந்திரத்தை நசுக்கிய இந்த அரசாங்கத்தின் அராஜக போக்கு நாட்டு மக்கள் எல்லோரும் அறிந்ததே.

பேச்சு சுதந்திரம், கேட்டும் சுதந்திரம் இந்த நாட்டில் இல்லை. சுயாதன நீதித்துறை சுயாதீன காவல்
துறை, சுயாதீன தேர்தல் ஆணைக்குழு என்பவற்றை 17 அரசியல் யாப்புத் திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி தனது கைக்கு எடுத்ததன் மூலம் எஞ்சியிருந்த ஜனநாயகமும் இந்த நாட்டில் புதைக்கப்ட்டுள்ளது' என்றார்.
SHARE

Author: verified_user

0 Comments: