30 Nov 2014

சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு கல்விக்கருத்தரங்கு

SHARE

(சா.நடனசபேசன்)

துறைநீலாவணை சமூகப் பொருளாதார கல்வி அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் இவ்வருடம் சாதாரணதரப் பரீட்சைக்குத்தோற்றவுள்ள துறைநீலாவணை  மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு 30 ஆம் திகதி துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் அமைப்பின் செயலாளர் சசிக்குமார் தலைiயில் இடம்பெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்வில் வித்தியாலய அதிபர் ரி.ஈஸ்வரன் மற்றும் அவ்அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டதுடன் கருத்தரங்கின் வளவாளராக பிரபல கணித ஆசிரியர் வ.மதிவண்ணன் கலந்துகொண்டு கருத்தரங்கினை நடாத்தினார்.திங்கட்கிழமை 1ஆம் திகதி விஞ்ஞானப்பாடத்திற்கான கருத்தரங்கு இடம்பெற இருப்பதுடன் இதற்கான வளவாளராக ஆசிரிய ஆலோசகர் இராசலிங்கம் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது





SHARE

Author: verified_user

0 Comments: