30 Nov 2014

கல்முனை கார்மேல் கன்னியர் மட மரிய தெரேசியாஸ் சர்வதேச ஆங்கில பாடசாலையின் முதலாவது வருடாந்த பரிசளிப்பு விழா

SHARE
(தில்லை)
கல்முனை கார்மேல் கன்னியர் மட மரிய தெரேசியாஸ் சர்வதேச ஆங்கில பாடசாலை தனது முதலாவது வருடாந்த பரிசளிப்பு விழாவானது நேற்று 29.11.2014, சனிக்கிழமை, பாடசாலை அதிபர்
அருட்சகோதரி லூக்கிறீஸ் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பாதுகாவலராக இப்பாடசாலையின் நன்கொடையாளி திரு. மைக்கல் றெக்மியர் பிரதம விருந்தினராகவும், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திரு. முரளீஸ்வரன்,  கௌரவ விருந்தினராக கல்முனை மாணவர் மீட்பு பேரவையின் தலைவர் பொறியியளாலர் திரு. ளு.கணேஸ்  அருட்தந்தை பயஸ் பிரசன்னா, போதகர் யோகராஜா, சிறப்பு விருந்தினர்களாக கல்முனை கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி. தி. பத்திரன கல்முனை மாநகர சபை உறுப்பினர் திரு. றியாஸ் திரு.ஊ.பு.துஸ்யந்தன் அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இப்பாடசாலையானது ஜேர்மன் நாட்டைச் சார்ந்த திரு. மைக்கல் றெக்மியர் அவர்கள் காலம் சென்ற தனது தாயாரான மரிய தெரேசியா அவர்களின் நினைவாக கட்டப்பட்டு, 2011 நவம்பர் 5ல், அப்போது மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயராக இருந்த கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பெற்றோர் தினமும், இல்ல விளையாட்டு போட்டிகளும், மாணவர்களின் ஆக்கக் கண்காட்சிகளும், புதுவருட நிகழ்வுகளும் நடைபெறுவது வழக்கமாகும். இந்த வருடம் பாடசாலையின் வளர்ச்சிப் படிகளில் ஒன்றான பரிசளிப்பு விழா நடைபெற்றுள்ளது.












SHARE

Author: verified_user

0 Comments: