14 Nov 2014

நீரிழிவு நோயாளர்களுடன் வாழ்தல் - விழிப்புணர்வு ஊர்வலம்.

SHARE
சர்வதேச நீரிழிவு தினம் இன்று (நவம்பர் -14 ) சர்வதேச ரீதியில் அனுஷ்ட்டக்கப் படுகின்றது. அந்த வகையில் சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதர வைத்தியசாலையினால் ஒழுங்கு செய்யப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம் இன்று வெள்ளிக்கிழமை (14) களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது.

இவ்விழிப்புணர்வு ஊர்வலம் களூவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு மார்கட் வீதியூடாகச் சென்று பிரதான வீதி வழியாகச் சென்று மீண்டும் வைத்தியசாலையினைச் சென்றடைந்தது.

நீரிழிவு நோயைத் தடுக்கக் கூடிய கூலோகங்களைத் தாங்கியவாறு விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

“நீரிழிவு நோயாளர்களுடன் வாழ்தல்” எனும் இவ்வருட சர்வதேச நீரிழிவு தின தொணிப்பொருளின் கீழ் நீரிழிவு தினம் அனுஷ்ட்டிக்கப் படுவதாக களூவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை நிருவாகம் தெரிவித்தது.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரதி வைத்திய அத்திட்சகர் ஜி.குணராசசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலை ஊழியர்கள், வைத்தியசாலை நலம்புரிச் சங்கத்தினரி, பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், களுவாஞ்குடி வர்த்தக சங்கத்தினர்  என பலர் இதில் இணைந்திருந்தனர்.


SHARE

Author: verified_user

0 Comments: